Monday, December 12, 2011

உன் படைப்பு

ஆணென்றும் பெண்ணென்றும் படைத்தாய்
ஆச்சரியம் அடைந்தேன் !
ஆறறிவு புகுத்தினாய் 
'ஆ' வென்று பார்த்தேன் !!
வேற்றுமையில் வலிமையை வித்திட்டாய்
வியந்து போனேன் !!!
அவர்களுள் 
குறுகிய மனம் படைத்தாய்
குறை கண்டேன் உன் படைப்பில்
உனக்கும் அடி சறுக்கியதோ 
என்னை படைத்தவனே?!

2 comments:

Raghu Lakshminaarayanan said...

"அவன்" மனிதர்களை வேறுபட்ட மனப்பான்மையுடன் படைக்கவில்லை..
"அவனை" பொருத்தமட்டில் எல்லோரும் ஓர் வர்ணம்.
"அவன்" சமமாக அறிவு என்ற நற்பயநூட்டும் ஆயுடமுடன் படைத்தான்
இவன் துஷ்ப்ரயோகம் செய்தால் "அவன்" படைப்பை குற்றம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

Jenz said...

விதியே 'அவன்' செயலாகும் போது
துஷ்ப்ரயோகமும் 'அவன்' செயல் தானே