Tuesday, February 14, 2012

அந்தரங்கத் தோழன்

சூரியன் வீடு திரும்ப,
அந்தி மாலையும் அரச மரத்தடியில் ஓய்வெடுக்க,
சந்திரன் மேலெழும்ப
விளக்கின் வெளிச்சங்கள் விடைபெற
எங்கும் நிசப்தம் நிறைய
நம் அந்தரங்க நேரம் தொடங்க
உன் மடி மீது தலை சாய
அன்பால் அணைத்ததும்
உடல் கூசிய ஆசைகளும்
வெளி காட்டாத வெட்கமும்
பூரித்ததும் புல்லறித்ததும்
அடக்கிய அழுகையும்
கொதித்த கோபமும்
வெறுத்த வெறுமையும்
கண்களிலும், மௌனங்களிலும்
மறைத்தவைகளும்
அச்சம் தவிர்த்து
வெட்கம் விலக்கி
வாய் விட்டழுது
உன்னோடு பகிர்ந்து கொள்ள
நீயே என்
அந்தரங்கத் தோழனானாய் இருளே!

6 comments:

Unknown said...

அருமை
நீரோடை மகேஷ்..

Jenz said...

நன்றி :)

Deepa Iyer said...

அற்புதம். :)

Jenz said...

Thank you "D"

Prasanna said...

இருளும், சொல்லாத சோகங்களும் எப்போதுமே இணைந்திருக்கின்றன . கவிதை அருமை

Jenz said...

நன்றி :) Prasanna