Friday, December 10, 2010

என் காத‌லி

அவளை காணும் வ‌ரை
க‌ன‌வுக‌ளை
க‌விதையாய் வ‌ரைந்தேன்!
அவளை காத‌லித்த‌ப் பின்
நிக‌ழ்வுக‌ளை
க‌விதையாய் ப‌திவு செய்தேன்!
அவ‌ளை பிரிந்த‌ பின்
துய‌ர‌ங்க‌ளை
க‌விதையாய் செதுக்கினேன்!
தெளிந்தேன்! தெரிந்து கொண்டேன்!
நான் காத‌லித்த‌து
அவ‌ளை அல்ல‌
க‌விதையை என்று!

Sunday, August 8, 2010

வழி காட்டி


திரும்பிப் பார்க்க நேரமில்லை
நடந்து வந்த காலடித் தடங்களை
வழி நடத்தும் சுவடுகள் இல்லை
முன் நிற்கும் பாதைகளில்
செல்ல மனம் விழையவில்லை
பலர் சென்ற வழிகளில்
வழி காட்ட யத்தனிக்கிறேன்
எவரும் செல்லாதப் பாதையில்
என் காலடிப் பதித்து!

Sunday, June 13, 2010

அ ஆ இ ஈ .....

அன்பால் இணைந்து
ஆண‌வ‌த்தால் பிரிய‌
இன்ப‌த்தைத் தேடி
ஈர்க்கும் திசையில் ந‌க‌ர‌
உள்ள‌ங்க‌ளில்
ஊர‌ட‌ங்கு அமைதி!
எண்ண‌த்தில் குழ‌ப்ப‌ம்
ஏக்க‌த்தின் தாக்க‌ம்
ஐய‌ங்க‌ளின் அச்சுறுத்த‌ல்
ஒருவ‌ர் வாழும் உல‌க‌ம் என‌
ஓடிய‌து த‌னிமை வாழ்க்கை!

A small attempt to write some lines in alphabetical order but with some theme.

தெளித‌ல்

ஏமாற்ற‌ம், அதை புரிந்து கொண்டேன்
நீ பொய் சொன்ன‌ போது
வ‌லி, அதை அறிந்து கொண்டேன்
நீ என்னிட‌மிருந்து வில‌கி நின்ற‌ போது
இற‌ப்பு, அதை தெரிந்து கொண்டேன்
நீ என்னை பிரிந்த‌ போது
என‌க்குள் நானே உயிர்த்தெழுந்தேன்
இனி நீ என‌க்கில்லை என்றான‌ போது!