Saturday, March 28, 2009

முன் தினம் பார்த்தேனே ....

Here is what I penned for music of Harris Jayaraj.....try singing it in the same tune as "Mun Dhinam Paarthene" song from Vaaranam Aayiram.....

Hehe....yes...he created the music...i wrote my own lyrics...and doesn't it mean I wrote for his music

------------------------------------------
முன் தினம் பார்த்தேனே
இன்றைக்கும் பார்த்தேனே
தினமும் தான் பார்ப்பேனே
என்னை நான் கண்ணாடியில்
எத்தனை பார்த்தாலும்
பார்த்தது போறாமல்
மறுபடி பார்த்தேனே,
நேரமும் வீணானதே !
கண்களில் மை பூசவா?
தலையிலே பூச்சூடவா?
இப்போதே அவன் வந்து பார்த்தால் என்ன ?
அதன் பிறகு மேக்கப்பை கலைத்தால் என்ன ?..... (2)

(முன் தினம்....)

தலை முதல் கால்கள் வரையில்
என்னை நானே ரசித்துக் கொள்ள
சில நேரம் நின்றேனே கண்ணாடி முன்
புடவை நிறத்தில் நெற்றிப் பொட்டும்,
வளையல் மாலை தோடுகள் அணிந்து
பொருத்தங்கள் பார்த்தேனே பல முறை நான்
ஒ....மீண்டும் மீண்டும் மாற்றிப் பார்த்தேன் பொருந்தும் வரை
இமை மையும் உதட்டுச் சாயம் சேரும் வரை
முட்கள் ரெண்டும் துரத்திச் செல்ல நேரம் போனதே !!

(முன் தினம்....)

Saturday, July 19, 2008

கிடைத்தும் எட்டாத பொக்கிஷம்

சிலருக்கு கிடைக்காதப் பொக்கிஷம்
எனக்கு கிடைத்தப் பெருமிதம்!
இந்தப் பெருமிதத்தோடு
அடுத்தவர் பார்வைக்கு எட்டாது
நான் உன்னோடு உலாவரும்
கனவுலகம்!
அக்கனவுலகத்தில்
உனக்காக நான் கொண்டிருக்கும்
எதிர்பார்ப்போ ஏராளம்!
அந்த எதிர்பார்ப்புகளின் நடுவே
பிடித்தவைகள் பிடிக்காமல் போயின;
எதிலும் உன் நினைவே மேலோங்கின;
அந்நினைவில் உள்ளமும் உடலும்
வலித்தப் போதிலும் சுகமாயின!
இப்படி
கனவோடும் வலியோடும்
உன்னை காணப் போகும் நாளை
எதிர்நோக்கி இருக்க,
நீயோ என்னைக் காணாது,
என் கனவுகளையும் இருட்டாக்கி
இவ்வுலகிற்கு வராது
என் கர்பப் பையிலேயே இறந்து
கிடைத்தும் எட்டாத பொக்கிஷமானதும் ஏனோ?

Wednesday, December 26, 2007

வரவேற்றுக் காத்திருக்கிறோம் !!

வரவேற்கிறோம்!
உன் காது மடலில்
கொஞ்சும் காதணிகளை!
உன் கையில் வலம் வரும்
வளையல் போன்ற வளையங்களை!
அவ்வப்போது மருதாணி
சிவக்கும் கைவிரல்களை!
பெண்களே (சில சமயம்) பொறாமைப்படும்
உன் கூந்தல் சரிவை!
பெண்களைப் போன்று
அழகு நிலையத்தையும்
நாடிச் செல்லும் இச்சைகளையும்
வரவேற்றுக் காத்திருக்கிறோம் !!
பெண்களைப் போன்றே
ஒரு நாள்
கருவையும் சுமப்பாய் என்று!!!

Monday, December 24, 2007

மோதலும் காதலும்

மோதலில் தொடங்கி
காதலில் வளர்ந்து
கல்யாணத்தில் தொடர்ந்து
நீதிமன்ற வாசலில் முடிவுற
மீண்டும் தொடர்ந்தது மோதல்!

Sunday, December 23, 2007

அடையாளம் !!!

ஆடவனே!
கட்டியத் தாலியும்,
இட்ட குங்குமமும்,
போட்ட மெட்டியும்,
உன் திருமணத்திற்கு
அடையாளம்
என்று நினைத்தாயோ?
இல்லை !




மற்ற ஆடவரை
நீ நம்பவில்லை
என்பதின் அடையாளம் !!!

Saturday, December 22, 2007

ஆசையும் காமமும்

பெண்ணின் காமம்
ஆசை இருக்கும் வரை
ஆணின் ஆசை
காமம் இருக்கும் வரை

Friday, December 21, 2007

வாழ்க்கை ஒப்பந்தம்


அடுத்தவர் பார்வைக்கோ
தாமரையாய்த் தெரிந்தது !
நான்குச் சுவருக்குள்ளேயோ
அந்தத் தாமரை மலரும்
சேற்றாய்க் கரைந்தது !
இதுவே இன்று பலரின்
வாழ்க்கை ஒப்பந்த முறையானது!!!!