Saturday, September 14, 2013

நெற்றி முத்தம்

காணாது தேக்கி வைத்த ஏக்கமும் 
பேசாது பொத்தி வைத்த கோபமும் 
கொஞ்சாமலும் கெஞ்ச விழையாமலும் 
அடக்கி வைத்த ஆணவமும் 
கரைந்துத் தான் போனது 
நிறைகுடம் தளும்பிய கண்ணீராய் 
அவன் இட்ட நெற்றி முத்தத்தில்! !

Saturday, March 16, 2013

புரிந்ததும் பிரிந்ததும்


கண்கள் பேசி
மனம் மௌனித்ததை 
அறிந்து நடந்தாய்  
புரிந்து கொண்ட தருணத்தில் 
கண்கள் மௌனித்து 
மனம் பேசியதை 
கேளாது போனாயே 
பிரிந்து போன தருணத்தில் 

Sunday, January 20, 2013

நிகர்

தோற்றுவிட்டாய் பெண்மையில் 
ஆதலால் காமம்!
தோற்றுவிட்டாய் பெண் அறிவிடம் 
ஆதலால் பெண் அடிமை!
தோற்றுவிட்டாய் சக ஆணிடம் 
ஆதலால் தாலியும் மெட்டியும்!
தோற்றுக் கொண்டிருக்கிறாய் உன்னிடமே 
உடல் சுரப்பிகளை அடக்க இயலாது!
உன் தோல்விகள் 
பெண்ணினத்தின் வலிமையை பறைசாற்ற 
அதையும் அறியாத ஆண்மகனே!
முயன்று வா 
தோல்விகள் வெற்றியின் படிகள் என்று 
காத்திருக்கும் பெண்ணினம் 
நிகர் ஆணினத்தைக் காண !