தமிழ் மணம்
Sunday, May 22, 2011
உயிர்க் காதல்
காதல் வயப்பட்டாள்
மறுபடியும்!
மலர்ந்ததும், படர்ந்ததும்
அறியும் முன்னே
ஆட்கொண்டது அவளை!
சரணடைந்தாள்
காதலின் மோகத்தில்!
மெல்ல மெல்ல
தன்னை இழந்தாள்
புற்று நோய்
அவள் மீது கொண்ட காதலில்!
துணை
தனிமைக்குத் துணையாக
உன்னை அழைத்தேன்
என் தனிமை
உன்னையும் அச்சுறுத்தியதோ
வர மறுத்தாயே
என் கண்ணீரே
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)