தமிழ் மணம்
Monday, February 10, 2025
போதிமரங்கள்
வாழ்க்கையின் இரைச்சலிலிருந்து
அவ்வப்போது விடுவிக்கும்
தற்காலிக போதிமரங்களாய் - டீக்கடைகள்!
புதிது
பண்டிகைக்குக் கூட புதிது வாங்காத
அம்மாவும் அப்பாவும்
புதுத்துணிப் போட்டிருந்தனர் - ஈமச்சடங்கில்
டீக்கடைகள்
மயானத்திலும் ஜாதிமத பிரிவினைகள்!
அவற்றை சுயேச்சையாக வென்று கொண்டிருக்கின்றன
சாலையோர டீக்கடைகள்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)