Tuesday, November 21, 2023

தாய்மொழி

அம்மாக்களுக்கு மட்டுமே 
புரிந்த பாஷை 
குழந்தையின் அழுகுரல் 

கண் பாஷை

புரிந்து கொண்ட இரு உள்ளங்களின் 
ஹைக்கூக் கவிதை
கண் பேசும் பாஷை

Sunday, November 12, 2023

தீபாவளி

நரகாசுரன் ஒழிந்தால் தீபாவளி அன்று!
பல நரகாசுரன்களுக்கு மத்தியில் தீபாவளி இன்று!!

இலவச இணைப்பு

அவள் உடம்பெல்லாம் தழும்புகள் 
டாட்டூக்கள் போல 
குடிபோதையின்  இலவச இணைப்பாய்!

தீண்டத்தகாதவை

சமூகப் பிரிவினையும், ஜாதிச் சான்றிதழும்  
தீண்டத் தகாதவையாயின
அவசர சிகிச்சைப் பிரிவில்!

பழையன கழிதல்

புது மனை புகும் முன் 
பழையென கழிதலில் 
சில உறவுகளும் !