Thursday, August 3, 2023

அந்தஸ்து வீதி

வாழ்க்கை தரம் மாறியதும் 
நட்பும் குடிபெயர்ந்தது !
புதிய நட்பின் முகவரி "அந்தஸ்து வீதி"!

வெட்டியான் - II

ஓலமும் ஒப்பாரியும் 
இளையராஜாவின் இன்னிசையாய் ஒலித்தது 
வெட்டியான் காதுகளில் 

வெட்டியான் - I

எழவுச் செய்தி வந்தது 
வீட்டு வாசலில்
மெலிதாகப் புன்னகைத்தனர் 
அடுத்தவர் பார்வையறியாது,
இன்று 
அவர்கள் வீட்டில் 
உலை கொதிக்கும் என்று 
வெட்டியானும் அவன் மனைவியும் !