தமிழ் மணம்
Thursday, December 14, 2023
கடவுள்
நாத்திகம் பேசும் தலைவனை
"கடவுளாய்"
பார்க்கும் தொண்டன்
போதை
போதைக்கு அடிமையானவள் தான்!
மீள்வது சாத்தியமில்லை; மீளும் எண்ணமும் இல்லை
வாசிப்புப் பழக்கம் தந்த போதையிலிருந்து!
பூஜ்ஜியம் - II
வெற்றிக்குப் பின்னால் இருக்கும்
பேசப்படாத ஹீரோக்களாய்
எண்களின் மதிப்பிற்குப் பின்னால் பூஜ்ஜியம்
பூஜ்ஜியம் - I
மதிப்பில்லா பூஜ்ஜியம்
மதிப்புக் கூட்டியது
தன்னைச் சார்ந்த எண்களுக்கு
கருக்கலைப்பு
கருக்கலைப்பு நியாயமாக்கப்பட்டது
விலங்குகளின் முட்டைகள்
மனிதனுக்கு உணவானபோது
Tuesday, November 21, 2023
தாய்மொழி
அம்மாக்களுக்கு மட்டுமே
புரிந்த பாஷை
குழந்தையின் அழுகுரல்
கண் பாஷை
புரிந்து கொண்ட இரு உள்ளங்களின்
ஹைக்கூக் கவிதை
கண் பேசும் பாஷை
Sunday, November 12, 2023
தீபாவளி
நரகாசுரன் ஒழிந்தால் தீபாவளி அன்று!
பல நரகாசுரன்களுக்கு மத்தியில் தீபாவளி இன்று!!
இலவச இணைப்பு
அவள் உடம்பெல்லாம் தழும்புகள்
டாட்டூக்கள் போல
குடிபோதையின் இலவச இணைப்பாய்!
தீண்டத்தகாதவை
சமூகப் பிரிவினையும், ஜாதிச் சான்றிதழும்
தீண்டத் தகாதவையாயின
அவசர சிகிச்சைப் பிரிவில்!
பழையன கழிதல்
புது மனை புகும் முன்
பழையென கழிதலில்
சில உறவுகளும் !
Wednesday, October 11, 2023
பேதமில்லை
ஜாதி இரண்டொழிய வேறில்லை என்றே,
வாழ்ந்துக் காட்டினார் அவர்
இரவு மஞ்சத்தில், "யாரவள்" என்று கேட்காத போது
Thursday, August 3, 2023
அந்தஸ்து வீதி
வாழ்க்கை தரம் மாறியதும்
நட்பும் குடிபெயர்ந்தது !
புதிய நட்பின் முகவரி "அந்தஸ்து வீதி"!
வெட்டியான் - II
ஓலமும் ஒப்பாரியும்
இளையராஜாவின் இன்னிசையாய் ஒலித்தது
வெட்டியான் காதுகளில்
வெட்டியான் - I
எழவுச் செய்தி வந்தது
வீட்டு வாசலில்
மெலிதாகப் புன்னகைத்தனர்
அடுத்தவர் பார்வையறியாது,
இன்று
அவர்கள் வீட்டில்
உலை கொதிக்கும் என்று
வெட்டியானும் அவன் மனைவியும் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)