Friday, August 31, 2018

கரைந்த கற்பூரம்

இருகத் தழுவினாலும்
அணைத்துக் கொள்ள முடியாத
கண்களில்
காதலும் காமமும்
ஒன்றுசேர்ந்து
திருமடல் ஏறியது போன்ற
உன் பார்வை,
தூரத்திலிருந்து
என்னை அணைக்க
கரைந்து தான் போனேன்
நானும்
காற்றணைத்த கற்பூரமாய்!