கனவுகளும், ஆசைகளும்
உனக்கு மட்டும் சொல்லி
பிடித்தவையும், பிடிக்காதவையும்
உன்னிடம் பேசி
வெட்கத்திலும், அழுகையிலும்
உன் மார்பில் முகம் புதைத்து
ஊடலும் கூடலுமாய்
உன்னை விலகியும், கட்டியணைத்தும்
பகலிலும், இரவிலும்
இன்பஙகளையும் துன்பங்களையும்
பகிர்ந்து கொள்ள
அவனாய் விளங்கும்
என் தலையணையே!
உன்னிடத்தை
அவன் அடையும் நாளெதுவோ?!