Saturday, July 19, 2008

கிடைத்தும் எட்டாத பொக்கிஷம்

சிலருக்கு கிடைக்காதப் பொக்கிஷம்
எனக்கு கிடைத்தப் பெருமிதம்!
இந்தப் பெருமிதத்தோடு
அடுத்தவர் பார்வைக்கு எட்டாது
நான் உன்னோடு உலாவரும்
கனவுலகம்!
அக்கனவுலகத்தில்
உனக்காக நான் கொண்டிருக்கும்
எதிர்பார்ப்போ ஏராளம்!
அந்த எதிர்பார்ப்புகளின் நடுவே
பிடித்தவைகள் பிடிக்காமல் போயின;
எதிலும் உன் நினைவே மேலோங்கின;
அந்நினைவில் உள்ளமும் உடலும்
வலித்தப் போதிலும் சுகமாயின!
இப்படி
கனவோடும் வலியோடும்
உன்னை காணப் போகும் நாளை
எதிர்நோக்கி இருக்க,
நீயோ என்னைக் காணாது,
என் கனவுகளையும் இருட்டாக்கி
இவ்வுலகிற்கு வராது
என் கர்பப் பையிலேயே இறந்து
கிடைத்தும் எட்டாத பொக்கிஷமானதும் ஏனோ?