Wednesday, December 26, 2007

வரவேற்றுக் காத்திருக்கிறோம் !!

வரவேற்கிறோம்!
உன் காது மடலில்
கொஞ்சும் காதணிகளை!
உன் கையில் வலம் வரும்
வளையல் போன்ற வளையங்களை!
அவ்வப்போது மருதாணி
சிவக்கும் கைவிரல்களை!
பெண்களே (சில சமயம்) பொறாமைப்படும்
உன் கூந்தல் சரிவை!
பெண்களைப் போன்று
அழகு நிலையத்தையும்
நாடிச் செல்லும் இச்சைகளையும்
வரவேற்றுக் காத்திருக்கிறோம் !!
பெண்களைப் போன்றே
ஒரு நாள்
கருவையும் சுமப்பாய் என்று!!!

Monday, December 24, 2007

மோதலும் காதலும்

மோதலில் தொடங்கி
காதலில் வளர்ந்து
கல்யாணத்தில் தொடர்ந்து
நீதிமன்ற வாசலில் முடிவுற
மீண்டும் தொடர்ந்தது மோதல்!

Sunday, December 23, 2007

அடையாளம் !!!

ஆடவனே!
கட்டியத் தாலியும்,
இட்ட குங்குமமும்,
போட்ட மெட்டியும்,
உன் திருமணத்திற்கு
அடையாளம்
என்று நினைத்தாயோ?
இல்லை !




மற்ற ஆடவரை
நீ நம்பவில்லை
என்பதின் அடையாளம் !!!

Saturday, December 22, 2007

ஆசையும் காமமும்

பெண்ணின் காமம்
ஆசை இருக்கும் வரை
ஆணின் ஆசை
காமம் இருக்கும் வரை

Friday, December 21, 2007

வாழ்க்கை ஒப்பந்தம்


அடுத்தவர் பார்வைக்கோ
தாமரையாய்த் தெரிந்தது !
நான்குச் சுவருக்குள்ளேயோ
அந்தத் தாமரை மலரும்
சேற்றாய்க் கரைந்தது !
இதுவே இன்று பலரின்
வாழ்க்கை ஒப்பந்த முறையானது!!!!

Thursday, December 13, 2007

இயற்கையின் சுயநலம்

இயற்கையே!
உன் மேகச் சுமையை மழையாக இறக்கினாய்!
உன் வெப்பச் சுமையை அக்னி நட்சத்திரமாய் ஒளிர்ந்தாய்!
உன் வேகச் சுமையை சுழற்காற்றாய் வீசினாய்!
உன் குளிர்ச் சுமையை பனியாகப் பொழிந்தாய்!
இப்படி
உன் சுமைகளை இறக்கி
இந்த பூமி்யை
சுமைத் தாங்கியாக மாற்றிய
உன் சுயநலத்தை
என்னென்று சொல்வது?

Sunday, December 9, 2007

அறியாமையா (அ) அவையடக்கமா?

பெண்ணே
உன் நிலைமைக்குக் காரணம்
உன் வலிமையைப் பற்றிய
அறியாமையா?
அல்லது
அறிந்தும் ஆண் வலியுறட்டும்
என்று விட்டுக்கொடுத்த
அவையடக்கமா?