தமிழ் மணம்
Wednesday, October 1, 2025
பசலை நோய்
பசலை நோயில் மரங்கள்
இலையுதிர் காலம்!
முதிர்க்கன்னி
காதல், கல்யாணம், குடும்பம்
அவள் கனவாய் !
முதிர்க்கன்னி அவள் !
வாழ்க்கை
வழுக்கு மரம் ஏறியதில்லை என்றேன்
சிரித்தது வாழ்க்கை
என்னைப் பார்த்து
சுத்தம்
சாக்கடை அள்ளுபவனின் நாசியை
சுத்தம் செய்தது
மீன் குழம்பு வாசம்
பிரசவ வலி
காசு இல்லா நாட்கள்
அண்டிப் பிழைத்த உணவு உருவாக்கியது
தொண்டைக்குள் பிரசவ வலி
நிர்வாணம்
இலை உதிர்ந்த மரங்கள் நிர்வாணமாய்
மேலாடைப் போர்த்தியது
வெள்ளை பனிக்கட்டிகள்
Monday, February 10, 2025
போதிமரங்கள்
வாழ்க்கையின் இரைச்சலிலிருந்து
அவ்வப்போது விடுவிக்கும்
தற்காலிக போதிமரங்களாய் - டீக்கடைகள்!
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)